search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கடையம் கொலை"

    கடையம் அருகே சொத்து தகராறில் அண்ணன் தம்பியை கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்பத்தி உள்ளது.

    கடையம்:

    தென்காசி மாவட்டம் கடையம் அருகே உள்ள மயிலப்பபுரத்தை சேர்ந்தவர் சேகர் (வயது 55). விவசாயி. இவருக்கு திருமணமாகி குழந்தைகள் உள்ளது.

    இவரது அண்ணன் அதே பகுதியை சேர்ந்த அருணாசலம் (59). அண்ணன், தம்பிகளுக்கிடையே சொத்து தகராறு காரணமாக பல ஆண்டுகளாக முன் விரோதம் இருந்து வருகிறது.

    இதனால் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. சேகருக்கு சொந்தமான தோட்டம் மயிலப்பபுரம் பெட்ரோல் பங்க் அருகே உள்ளது.

    இந்நிலையில் இன்று காலை தனது தோட்டத்திற்கு தண்ணீர் பாய்ச்சுவதற்காக சேகர் அங்கு சென்றார். அப்போது அங்கு வந்த அருணாசலம் அவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.

    இதில் இருவருக்கும் இடையே தகராறு முற்றவே ஆத்திரம் அடைந்த அருணாசலம் மண்வெட்டியால் சரமாரியாக தம்பியை தாக்கினார். இதில் பலத்த காயம் அடைந்த அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

    இதுகுறித்து தகவலறிந்த கடையம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ரெகுராஜன் மற்றும் போலீசார் விரைந்து சென்று அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தென்காசி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    மேலும் கொலை தொடர்பாக அருணாசலத்தை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    கடையம் பெட்டிக்கடைக்காரர் கொலை வழக்கு பற்றி தனிப்படை போலீசார் தீவிர விசாரணை நடத்தி வரும்நிலையில் பெண் விவகாரத்தில் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகமும் எழுந்துள்ளது.
    கடையம்:

    நெல்லை மாவட்டம் கடையத்தை அடுத்த கீழக்கடையம் ஆலிபூதத்தான் கோவில் தெருவை சேர்ந்தவர் நரசிம்மன் (வயது 55). இவருக்கு திருமணம் முடிந்து, கடந்த 15 வருடங்களுக்கு முன்பே மனைவி பிரிந்து சென்றுவிட்டார். இதனால் தனியாக வசித்து வந்த இவர், கடையம் ரெயில் நிலையம் செல்லும் வழிக்கு எதிரே உள்ள தனக்கு சொந்தமான கட்டிடத்தில் பெட்டிக்கடையுடன் கூடிய டீக்கடை நடத்தி வந்தார். தனது கடையின் மாடியில் உள்ள அறையில் அவர் குடியிருந்து வந்தார்.

    இந்நிலையில் நேற்று காலை மாடியில் உள்ள அறையில் நரசிம்மன் வேட்டி சட்டையால் கை, கால்கள் கட்டப்பட்டு, தலையில் பலத்த ரத்தக்காயத்துடன் நிர்வாண நிலையில் கொலை செய்யப்பட்டு பிணமாக கிடந்தார்.

    இதுபற்றிய தகவல் அறிந்ததும் அம்பை துணை போலீஸ் சூப்பிரண்டு ஜாகிர் உசேன், கடையம் இன்ஸ்பெக்டர் ஆதிலட்சுமி, சப்-இன்ஸ்பெக்டர்கள் பாரத் லிங்கம், சுரேஷ், சந்திரசேகர் மற்றும் போலீசார் அங்கு விரைந்து வந்து பார்வையிட்டனர். நெல்லையில் இருந்து மோப்ப நாய் ‘டைகர்’ வரவழைக்கப்பட்டது. அது அங்கிருந்து மோப்பம் பிடித்துக்கொண்டு, சுமார் ஒரு கிலோமீட்டர் தூரம் வரை ஓடியது. ஆனால், யாரையும் கவ்விப்பிடிக்கவில்லை. தடயவியல், கைரேகை நிபுணர்களும் வந்து ஆய்வு செய்தனர்.

    இதுகுறித்து கடையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து முன்விரோதம் காரணமாக அவர் கொலை செய்யப்பட்டாரா? அல்லது வேறு காரணம் ஏதேனும் உள்ளதா? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் இந்த கொலையில் 5-க்கும் மேற்பட்டோர் சேர்ந்து ஈடுபட்டிருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கின்றனர். மேலும் நரசிம்மன் பெண் விவகாரத்தில் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகமும் எழுந்துள்ளது.

    கொலை பற்றி துப்பு துலக்க இன்ஸ்பெக்டர் ஆதிலட்சுமி தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. தனிப்படை போலீசார் பல்வேறு பகுதிக்கு சென்று விசாரணை நடத்தி வருகிறார்கள். சந்தேகப்படும்படியான நபர்களை போலீசார் பிடித்து விசாரித்து வருகின்றனர்.

    இதுவரை அப்பகுதியை சேர்ந்த 10-க்கும் மேற்பட்டோரிடம் விசாரணை நடத்தப்பட்டு உள்ளது. எனினும் கொலை பற்றி துப்பு துலங்கவில்லை. தொடர்ந்து இதுபற்றி விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
    கடையத்தில் பெட்டிக்கடைக்காரர் அடித்துக்கொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கடையம்:

    நெல்லை மாவட்டம் கீழக்கடையத்தை சேர்ந்தவர் நரசிம்மன் (வயது45). இவர் கடையம் ரெயில் நிலையம் அருகே சந்தையின் எதிரே டீக்கடை மற்றும் பெட்டிக் கடை வைத்து நடத்தி வந்தார். தினமும் இரவில் இந்த கடையின் மேல் தளத்தில் அவர் படுத்து தூங்குவது வழக்கம்.

    நேற்று இரவும் அவர் வழக்கம் போல் கடையை பூட்டி விட்டு மாடியில் படுத்து தூங்கியுள்ளார். இந்நிலையில் இன்றுகாலை வெகுநேரமாகியும் நரசிம்மனின் கடை திறக்கப்படவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த அவரது தம்பி ரவி வந்து பார்த்தார்.

    மாடியில் சென்று பார்த்த போது அங்கு நரசிம்மன் கை, கால்கள் கட்டப்பட்ட நிலையில் ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்தார். அதனை பார்த்து அதிர்ச்சியடைந்த அவர், அது பற்றி கடையம் போலீஸ் நிலையத்துக்கு தகவல் கொடுத்தார். இதையடுத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் ஆதிலெட்சுமி மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை மேற்கொண்டனர்.

    நரசிம்மனின் தலையில் கட்டையால் அடித்ததற்கான காயங்கள் இருந்தன. மேலும் அவரது வாயில் சாணத்தை ஊற்றியதற்கான தடயங்களும் இருந்தது. ஆகவே இதனால் அவரை யாரோ மர்ம நபர்கள் சித்ரவதை செய்து அடித்துக் கொலை செய்திருப்பது தெரியவந்துள்ளது.

    சம்பவ இடத்திற்கு நெல்லையில் இருந்து போலீஸ் மோப்ப நாய் வர வழைக்கப்பட்டது. அது சம்பவ இடத்தை மோப்பம் பிடித்து விட்டு சிறிது தூரம் ஓடிச்சென்று நின்றது. தடயவியல் நிபுணர்களும் வந்து சம்பவ இடத்தில் தடயங்களை சேகரித்தனர்.

    இதைத்தொடர்ந்து போலீசார் பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு தென்காசி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இந்த கொலை குறித்து போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். கொலைக்கான காரணம் மற்றும் கொலையாளிகள் குறித்து துப்பு துலக்க தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.

    கொலை செய்யப்பட்ட நரசிம்மனின் மனைவி பெயர் விமலா. கருத்து வேறுபாடு காரணமாக கணவன்- மனைவி இருவரும் பிரிந்து வாழ்ந்து வந்தனர். இந்நிலையில் நரசிம்மன் கொலை செய்யப்பட்டுள்ளார். அவரை கொலை செய்தது யார்? எதற்காக கொலை செய்தனர்? என்பது மர்மமாக உள்ளது.

    இது தொடர்பாக தனிப்படை போலீசார் பல்வேறு கோணங்களில் விசாரணை மேற் கொண்டு வருகின்றனர். பெண் தொடர்பு அல்லது ஓரினச்சேர்க்கை விவகாரத்தில் அவர் கொல்லப்பட்டாரா? என்ற கோணத்திலும் விசாரணை நடத்தப்படுகிறது.

    நரசிம்மனின் கடை அருகில் பகல் மற்றும் இரவு நேரங்களில் ஏராளமான வாலிபர்கள் கூடி நின்று பேசுவது வழக்கம். அவர்கள் யாரேனும் இந்த கொலையில் ஈடுபட்டார்களா? என்றும் விசாரணை நடத்தப்படுகிறது.

    இந்த கொலை சம்பவம் கடையம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    ×